தோட்டத்தில் காவலுக்கு இருந்த நபர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

தாளவாடி அருகே தோட்டத்தில் காவலுக்கு இருந்த நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்

Update: 2024-03-12 10:13 GMT

யானை தாக்கி உயிரிழப்பு 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஜீரகஹள்ளி வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி யானைகள் காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விடுகின்றன. மேலும் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களையும் நாசம் செய்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் காவலுக்காக தோட்டங்களிலேயே தங்கி விடுகிறார்கள். இந்த நிலையில் திகினாரையைச் சேர்ந்தவர் மாக்கைய (வயது 70 ). விவசாயி தோட்டத்தில் காவலுக்கு வந்த போது அதிகாலை யானை சத்தம் கேட்டு வெளியே வந்தவரை மறைவில் இருந்து வந்த காட்டு யானை ஓன்று துதிக்கையால் தாக்கி காலால் மிதித்ததில் மாக்கையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீஸரர்க்கும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவத்தை சேர்ந்த போலீசார் இருந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தாளவாடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Tags:    

Similar News