குட்கா முறைகேடு : சிபிஐக்கு நீதிமன்றம் கண்டனம்
குட்கா முறைகேடு தொடர்பான முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைக்கவில்லை என கூறி 3 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதா? என சிபிஐக்கு சென்னை சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தமிழகத்தில் விற்பனை செய்ததாக டெல்லி சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது. கூடுதல் குற்றபத்திரிகையில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா முன்னாள் டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.
குட்கா முறைகேடு தொடர்பான முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைக்கவில்லை என கூறி 3 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதா? என சிபிஐக்கு சென்னை சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் விசாரணை மே 2 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.