"மின் இணைப்பை துண்டிக்க முழு உரிமை உள்ளது" - நீதிமன்றத்தில் வாதம்

Update: 2024-05-30 10:34 GMT

பீலா வெங்கடேசன்

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸும், பீலா வெங்கடேசனும் கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்தபோது  வாங்கிய பங்களா வீடு தற்போது இருவரும் பிரிந்ததால் பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

தையூர் பங்களா வீட்டின் மின் இணைப்பை துண்டிக்குமாறு செங்கல்பட்டு மின்வாரிய பொறியாளருக்கு பீலா வெங்கடேசன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தையூர் பங்களாவிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் பீலா வெங்கடேசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது.

பீலா வெங்கடேசன் பெயரில் மின் இணைப்பு உள்ளதால் அதனை தற்காலிகமாக துண்டிக்குமாறு கோரிக்கை வைக்க அவருக்கு முழு உரிமை உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News