கழிவுநீர் தொட்டியில் சிறுமி விழுந்து உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசு, காவல்துறை, சிபிஐ பதிலளிக்க உத்தரவு!!

கழிவுநீர் தொட்டியில் சிறுமி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு, காவல்துறை, சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-01-17 11:38 GMT

high court of madras

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயிரிழந்த சிறுமியின் தந்தை பழனிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த மனுவில், விக்கிரவாண்டி போலீசார் விசாரணையை முறையாக நடத்தவில்லை என சிறுமியின் தந்தை பழினிவேல் குறிப்பிட்டிருந்தார். மேலும், சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு முறையாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. பள்ளியில் இருந்து 20 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருந்தும், சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் போலீசாருக்கு தகவல் கூறவில்லை. சிறுமி மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மனு மீதான விசாரணையை தொடர்ந்து, தமிழக அரசு, காவல்துறை, சிபிஐ பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மனு மீதான விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News