தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத்துறை நடவடிக்கை

புதுவை இளைஞருக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரம் தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2024-05-09 02:55 GMT

புதுவை இளைஞருக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரம் தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


புதுவை இளைஞருக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரம் தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் போதிய வசதிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதால் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை தொடர்ந்து மருத்துவமணை சார்பில் பராமரிப்பு பணி காரணமாக மருத்துவமனை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அறிக்கையில் டி பி ஜெயின் மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள், டெக்னீசியன்கள் போதுமான அளவு இல்லை. அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரிவிந்து கையெழுத்து பெற வில்லைஅறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை அவசரகால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தவறுகள் மருத்துவமனை மீது உள்ளதால் தற்காலிகமாக மூட வேண்டும். மேலும் உரிய மருத்துவர்கள், சிகிச்சைக்கான கருவிகளை அமைக்க வேண்டும் எனவும் மருத்துவமனைக்கு உத்தரவு.
Tags:    

Similar News