தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ் பாரதி அளித்த புகார் தொடர்பாக வரும் 17ம் தேதிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2024-04-15 09:19 GMT

ஆர்.எஸ் பாரதி அளித்த புகார் தொடர்பாக வரும் 17ம் தேதிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுகவின் தேர்தல் விளம்பரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பதாகக் கூறி, அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். "இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்" என்ற தலைப்பில், திமுக சார்பில் சில விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விதிமுறை முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என ஏப்ரல் 17ம் தேதிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News