கீதா ஜீவன் வழக்கில் மேல்முறையீடுக்கு ஆவணங்களை வழங்க கோர்ட் உத்தரவு
அமைச்சர் கீதா ஜீவன் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Update: 2024-06-25 05:04 GMT
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தொகுதி வாக்காளர் என்ற முறையில் மேல் முறையீடு செய்வதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகல்களை வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மனு அளித்துள்ளார். 15 நாட்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.