10ம் வகுப்பு பாட புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு
10ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு உரைநடை பாடமாக கொடுக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. பன்முக கலைஞர் என புதிய தலைப்பில் ஐந்து பக்கங்களுக்கு அவரது வாழ்க்கை வரலாறு பாடப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விநியோகிக்கப்படும் பத்தாம் வகுப்பு தமிழ் மொழி புத்தகத்தில் புதிய பாடப்பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் பாடப் புத்தகத்தின் உரைநடை பகுதியில் கலை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தை உள்ள கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர் என்ற தலைப்புகளில் பாடம் கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.