ஒகேனக்கல் : காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றின் நீர் வரத்து 1200 கன அடியாக அதிகரித்துள்ளது.;
Update: 2024-05-12 02:18 GMT
அருவியில் கொட்டும் நீர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களாக போதிய அளவு மழை இல்லாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்து விடாததாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வறண்டு ஆங்காங்கே பாறைகளாக காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து 1200 கன அடியாக வந்து கொண்டுள்ளது இதனால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.