தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய  விடுமுறை: தொழிலாளர் நலத்துறை உத்தரவு

மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய  விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது;

Update: 2024-03-29 09:22 GMT

தொழிலாளர் நலத் துறை 

மக்களவைத் தேர்தல்  ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்  இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இதன்படி ஒவ்வொரு  வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய  விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள்,கடைகள், உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிபிஓ (BPO) நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக புகார் அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கி அதற்கான எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News