குதிரைப் பந்தயம் எப்படி உருவானது!
Update: 2024-05-18 11:05 GMT
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் குதிரைப்பந்தயம் நடந்திருக்கிறது.கி.மு 664-இல் நான்கு குதிரைகளை ஒரு ரதத்தில் பூட்டி கிரேக்கர்கள் குதிரைப்பந்தயம் நடத்தியுள்ளார்கள்.கி.மு. 624- இல் குதிரையில் அமர்ந்து அதை ஓட்டி பந்தயம் நடத்தினார்கள்.
திறமையான ஜாக்கிகளாலேயே குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெறமுடியும். பொது மக்கள் எந்தக் குதிரை முன்னால் வரும் என்று கணக்கிட்டு பந்தயம் கட்டுவார்கள். உலகப் புகழ்பெற்ற குதிரைப் பந்தயம், லண்டனில் உள்ள எப்சன் டவுன்ஸ் என்னுமிடத்தில் நடக்கும் இங்கிலிஷ் டெர்பிதான்.
குதிரைப்பந்தயம் இந்தியாவில் மும்பை, கொல்கத்தா பூனா, பெங்களூர், ஊட்டி, சென்னை போன்ற நகரங்களில் வருடத்திற்கு ஆறு மாதங்களாவது தொடர்ந்து நடக்கும்.