எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? - முதல்வர் குற்றசாட்டு
Update: 2024-04-15 10:19 GMT
மோடி அரசை கண்டித்து அப்பட்டமான பொய்க் கணக்கு கூறுவதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.1,960 கோடி,
ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ரூ.63,246 கோடி,
சாகர்மாலா திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி என்று,ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பாஜக அரசு ரூ.10.7 லட்சம் கோடி அளித்ததாக அப்பட்டமான பொய்க் கணக்கு கூறுவதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.