அதிமுக சார்பில் வரும் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் !

போதைப்பொருட்களின் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.

Update: 2024-03-08 16:08 GMT

திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதோடு; தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்தும்; போதைப் பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திமுக அரசைக் கண்டித்தும், வருங்கால தலைமுறையினரின் நலனை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்த மனித சங்கிலிப் போராட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News