சத்தியமங்கலம் அருகே மனித எலும்புக்கூடு

சத்தியமங்கலம் அருகே அடர்ந்தவணப் பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2024-06-27 13:18 GMT

கோப்பு படம்

 சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. ஆசனூர் அருகே உள்ள தொட்டபுரம் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது வனப்பகுதியில் மனித எலும்புகள் கிடப்பதை பார்த்துள்ளனர்.

இது குறித்து ஆசனூர் போலீஸார்க்கு தகவல் கொடுத்தனர். ஆசனூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று எலும்புகளை கைபற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடந்த வனபகுதியில் மனித எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

Similar News