மனைவியை கொன்ற கணவன் - விசாரணையில் வெளிவந்த உண்மை

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்;

Update: 2023-12-21 05:45 GMT

 மனைவி கொலை

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கிருஷ்ணசமுத்திரம் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27) அவருக்கு சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ்வரி (வயது 23) என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று  மூன்று வயதில் நகுலன் என்ற ஆன் குழந்தை உள்ளது. சென்டிரிங் வேலை செய்து வரும் சுரேஷ் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்று  ரூ. 50 ஆயிரம்  பணம் கேட்டும் மனைவியின் மீது சந்தேகித்தும் தகராறு செய்வதாக கூறப்படுகின்றது.

Advertisement

இந் நிலையில், இரவு வீட்டில் புவனேஸ்வரி தூக்கிட்டு  தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது தந்தை ராஜாவுக்கு சுரேஷ் போன் செய்து  தகவல்  தந்துள்ளார்.   

திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எனது மகள்  தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக  இறந்தவரின் தந்தை ராஜா புகாரின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து சுரேஷிடம் விசாரணையில் மனைவி  நடத்தையில் சந்தேகம் இருந்ததால்,  உருட்டு கட்டையில் அடித்தும், கயிற்றால் கழுத்தை நெறுக்கி  கொலை செய்து பேனில் தலை மாட்டி தற்கொலை செய்துக் கொண்டதாக நம்பவைக்க முயற்சி செய்ததாக  வாக்கு மூலத்தில் தெரிவித்தார். இதனை அடுத்து சுரேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News