போதைப் பொருள் கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை - ஜாபர் சாதிக் மனு.

போதைப் பொருள் கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை, தன் மீது தவறான உள் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஜாபர் சாதிக் மனு அளித்துள்ளார், மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Update: 2024-07-05 04:26 GMT

ஜாபர் சாதிக்

சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்க துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மனுத்தாக்கல் செய்தார், அது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வர உள்ளது. போதை பொருளை கடத்தியதாக, ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த அமலாக்க துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை; தன் மீது தவறான உள் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும். சட்டவிரோதமான கைதை சட்டப்பூர்வமாக்கும் வகையில், தனக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை, திஹார் சிறையில் உள்ள தன்னை அமலாக்க துறை வழக்கில் கைது செய்வது தொடர்பாக வாரண்ட் பெற்றுள்ளது என்றும் ஜாபர் சாதிக் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News