25 எம்.பிக்கள் கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழகமும் இடம்பெற்றிருக்கும்- அன்புமணி

Update: 2024-07-24 10:12 GMT

அன்புமணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2024 -2025 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(23.7.2024) தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும் மாநிலத் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி , ''48 லட்சம் கோடி ரூபாய் கொண்ட பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வந்திருக்காதா?. பட்ஜெட்டில் எல்லா மாநிலம் பெயர்களையும் சொல்ல முடியாது. இந்தியாவிற்கு பொதுவானது தான் பட்ஜெட். தமிழகத்திற்கு இது தான், கேரளாவிற்கு இது தான், கர்நாடகாவிற்கு இது தான் என்று ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் சொல்ல முடியாது.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் 25 தொகுதிகளில் எங்களை ஜெயிக்க வைத்திருக்க வேண்டும். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எவ்வளவு நிதி வந்திருக்கிறது என்பதை விரைவில் தரவுகளுடன் கூறுவோம்.” என்றார். இறுதியாகக் கூட்டணிக் கட்சி தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவோம்; பட்ஜெட்டில் எங்களுக்கும் சில வருத்தங்கள் இருக்கிறது” எனவும் தெரிவித்தார். 

Tags:    

Similar News