மகா தீப மலையில் மீண்டும் மண் சரிவு ஏற்படும்: ஐ.ஐ.டி. வல்லுனர்கள் எச்சரிக்கை

மகா தீப மலையில் மீண்டும் மண் சரிவு ஏற்படும் என ஐ.ஐ.டி. வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2024-12-03 06:23 GMT
மகா தீப மலையில் மீண்டும் மண் சரிவு ஏற்படும்: ஐ.ஐ.டி. வல்லுனர்கள் எச்சரிக்கை

t.malai landslide

  • whatsapp icon

திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்து பலியான மேலும் 2 பேர் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி ஓய்வு பெற்ற வல்லுனர்கள் மோகன், நாராயண ராவ், பூமிநாதன் ஆகியோர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வந்தனர். அவர்கள் மீட்பு பணிக்கு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மகாதீப மலையில் தொடர் மழை பெய்தால் மீண்டும் மண் சரிவு ஏற்படும். லேசான மலையின் போது எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மலை அருகே வீடுகள் கட்டும் பொதுமக்கள் முன்கூட்டியே என்ஜினீயர் மூலம் ஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும். மண் சரிவு குறித்து அறிக்கை தயார் செய்துள்ளோம். இதனை அரசிடம் சமர்ப்பிப்போம். இது குறித்த முழு விவரங்களை அரசு வெளியிடும் என்றனர்.

Tags:    

Similar News