ஐ.ஐ.டி மெட்ராஸில் இருந்து என்னைப்போல 200 இளையராஜா உருவாக வேண்டும்!

ஐ.ஐ.டி மெட்ராஸில் இருந்து என்னைப்போல 200 இளையராஜா உருவாக வேண்டும் என்று நிகழ்ச்சியில் இளையராஜா பேசினார்.

Update: 2024-05-20 16:07 GMT

ஐ.ஐ.டி மெட்ராஸில் இருந்து என்னைப்போல 200 இளையராஜா உருவாக வேண்டும் என்று நிகழ்ச்சியில் இளையராஜா பேசினார்.


சென்னை ஐஐடி சார்பில், இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் 9-வது மாநாடு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த துவக்க விழாவில் திரிபுரா மாநில ஆளுநர் இந்திரா சேனா, இசையமைப்பாளர் இளையராஜா, ஐஐடி இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான நாள், கிராமத்திலிருந்து இசைக்காக ஒரு சிறுவன் 400 பணத்தோடு சென்னைக்கு வந்தான்.அது நான் தான் ஆனால் இதுநாள் வரை நான் இசையை கற்று கொள்ள வில்லை,மற்றவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறேன். நான் பிறந்த ஊரில் எனக்கு இசையை கற்றுக் கொடுக்க ஆட்களை தேடிக்கொண்டே இருந்தேன். நாம் செய்யக்கூடிய வேலையில் தாகம் ஏற்பட்டால் கண்டிப்பாக வெற்றி அடையலாம். நான் சாதித்து விட்டேன் என்று எல்லாரும் கூறுகிறார்கள் ஆனால் அப்படி ஒன்றும் தெரியவில்லை, நான் எப்படி கிராமத்தில் இருந்து வந்தேனோ அதேபோலவே இன்றும் உள்ளேன். அன்று பாரதியார் சொன்னார், எட்டுத்திக்கும் சென்று கலைகளை கற்று இங்கு செயல்படுத்த வேண்டும் என்று ஆனால் அது தவறு. இங்குள்ள கலைகளை கற்று கொண்டு எட்டுதிக்கும் சென்று பரப்ப வேண்டும். ஐ.ஐ.டி மெட்ராஸில் இருந்து என்னைப்போல 200 இளையராஜா உருவாக வேண்டும் இசை எனக்கு இயற்கையாகவே வரக்கூடியது என்று பேசினார்.
Tags:    

Similar News