மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு குணா பட பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2024-05-23 03:49 GMT
மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன்னுடைய அனுமதியின்றி குணா பட பாடலை, மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News