சட்ட விரோத மது கடத்தல் ஒருவர் கைது!

காரில் அதிக மது பாட்டில்களுடன் வந்தவரை ஊட்டியில் போலீஸார் கைது செய்தனர்.

Update: 2024-06-26 15:16 GMT

காரில் அதிக மது பாட்டில்களுடன் வந்தவரை ஊட்டியில் போலீஸார் கைது செய்தனர்.


ஊட்டியில் சட்டவிரோத மது விற்பனை அதிகளவில் இருப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. இதன் பேரில் ஊட்டி மத்திய காவல் நிலைய துணை ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று இரவு ஊட்டி மத்திய பஸ் நிலையம் மற்றும் மின் வாரிய அலுவலக ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்‌. அப்போது இரவு 11 மணியளவில் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சேதனை நடத்தினர். அப்போது காருக்குள் இருந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

காரில் சட்டவிரோதமாக ஒரே சமயத்தில் அதிக அளவு மது வாங்கி, கூடுதல் விலைக்கி விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஊட்டி, எச்.பி.எப்., இந்துநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (51) என்பதும் குத்தகைக்கு காட்டேஜ் எடுத்து நடத்தி வருவதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 192 மது பாட்டில்கள் மற்றும் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் மொத்தமாக அவருக்கு மது வழங்கிய டாஸ்மாக் ஊழியர்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News