சட்டவிரோத சாராயம்; நீலகிரியில் இருவர் கைது!

நீலகிரியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2024-06-22 01:52 GMT

நீலகிரியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்ததாக 109 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 40 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுக்க இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளும் யோகமும் ஏற்படுத்தியுள்ளது. சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர் பணியிட‌ மாற்றம், காவல் கண்காணிப்பாளர் உள்பட போலீஸார் பணியிடை நீக்கம் என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி., உத்தரவிட்டார். இதன்படி நீலகிரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தர்ராஜன் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதில் கோத்தகிரி செம்மனாரை பகுதியை சேர்ந்த ராமன் (40) வீட்டில் 2 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்தனர். இதேபோல் கூடலூர் அடுத்த நியூ ஹோப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியசோலை பகுதியில் 5 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்த வெள்ளை ஜோஸ் (55) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ......

Tags:    

Similar News