தமிழ்நாட்டில் நவ.26, 27 ஆகிய 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை மையம்
தமிழ்நாட்டில் நவ.26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நவ.26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவ.25, 26 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21.11.2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று (Today Weather) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நவம்பர் மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது. நவ.25 அன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.25 முதல் பருவமழை வலுவடையும் என இந்திய வானிலை (Weather) ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, தென்மேற்கு வங்கக்கடலில் 25ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வங்கக்கடலில் மையம் கொண்டு இருக்கும். இது புயலாகவும் மாற வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.