தேர்வு முடிவுகள் வந்தாச்சா..? அப்போ +2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !
Update: 2024-05-06 05:55 GMT
+2 மாணவர்கள்
தமிழ்நாட்டில் +2 மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 35 மாணவர்கள் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்களும், ஏழு பேர் ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளை அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் ஒன்பதாம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பின் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறுமதிப்பீடு, மறு கூட்டல் நாளை முதல் தொடங்குகிறது எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.