சென்னை பெருநகர வளர்ச்சி குழு சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு

சென்னை பெருநகர வளர்ச்சி குழு சார்பில் முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர் பாபுவெளியிட்டார் .

Update: 2024-06-22 03:00 GMT

சேகர் பாபு

சென்னை பெருநகர பகுதியில் 10 பொது நூலகங்கள் மின்னணு வடிவில் ரூபாய் 20 கோடி செலவில் மேம்படுத்தப்படும். சென்னை பெருநகர பகுதியில் கைவண்ண சதுக்கம் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவு திடல் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம் 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். கோயம்பேடு மொத்த அங்காடி வளாகத்தில் குளிர்வூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு மழை நீர்வாடிகால்வாய் பணிகள் சீரமைக்களுக்கு ரூபாய் 32 கோடி செலவிடப்படும். சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூபாய் 10 கோடி மதிப்பெட்டியில் மேம்படுத்தப்படும்.

சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள 10 சுரங்க பாதைகளில் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள முக்கிய போக்குவரத்து சிக்னல்கள் சூரிய சக்திகள் இயங்கும் வகையில் சாலை சந்திப்புகள் மக்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை பெருநகர பகுதியில் 11 சமுதாய நலக்கூடங்கள் ரூபாய் 77 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னை பெருநகர பகுதியில் ஆறு பேருந்து நிலையங்கள் ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். போரூர் பெருங்குடி உட்பட ஐந்து நீர்நிலை ஏரிகள் ரூபாய் 33 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று புதிய அறிவிப்புகளை சென்னை பெருநகராட்சி குழுமம் சார்பில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

Tags:    

Similar News