சென்னையில் ரூ. 9.13 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

சென்னையில் ரூ. 9.13 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.;

Update: 2024-04-01 09:54 GMT

 சென்னையில் ரூ. 9.13 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.  

சென்னை மாவட்டத்தில் 39 லட்சத்து 25 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர் : சென்னையில் 3726 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன , 579 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவை வேட்பாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய சென்னையில் உள்ள வாக்குச் சாவடிகளில் 2 வாக்குபதிவு இயந்திரங்களும் , வட மற்றும் தென் சென்னையில் தலா 3 வாக்குபதிவு இயந்திரங்களும் இடம்பெறும் சென்னையில் 9.13 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன : ரொக்கமாக 3.35 கோடியும் , 5.55 கோடி மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் வணிகர்கள் 1 லட்சத்தை எடுத்து செல்ல வேண்டுமென்றால் தலா 50 ஆயிரமாக இரண்டு முறை எடுத்து செல்லலாம் சென்னை மாநகராட்சி ஆணையர் , மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி
Tags:    

Similar News