தமிழகத்தில் 27 ஆம் தேதி வரை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகாரிக்கும்

27ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.;

Update: 2024-03-23 17:37 GMT
தமிழகத்தில் 27 ஆம் தேதி வரை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகாரிக்கும்

வெப்பநிலை

  • whatsapp icon
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இன்று முதல் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். இன்றும் நாளையும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்களைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 5, ஊத்து (திருநெல்வேலி), தக்கலை (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 2, ராதாபுரம் (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), அடையாமடை (கன்னியாகுமரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி) 1, பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 1 சென்டி மீட்டர்.
Tags:    

Similar News