தூத்துக்குடியில் கனிமொழி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2024-03-21 10:04 GMT
மாலை அணிவித்த கனிமொழி

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி சென்னையில் இருந்து இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.

அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்ப்படிக்கப்பட்டது பின்னர் தூத்துக்குடியில் உள்ள அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கார், தந்தை பெரியார், டாக்டர் கலைஞர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருஸ் பர்னாந் உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர்.

Tags:    

Similar News