பாப்பான்குளத்தில் மகளிர் சுய உதவி குழு கட்டிட திறப்புவிழா

மடத்துக்குளம் பாப்பான்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டடத்தை அமைச்சர் மு. பெ சாமிநாதன் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.

Update: 2024-02-09 13:04 GMT


மடத்துக்குளம் பாப்பான்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டடத்தை அமைச்சர் மு. பெ சாமிநாதன் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சி,பாப்பான் குளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழு கட்டடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி, திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் காவியாஅய்யப்பன் ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News