கல்குவாரி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை
வருமானவரித்துறையினர் சோதனை.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வடக்குப்பம் பகுதியில் உள்ள ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான மலைப் பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருகின்றது. அக் குவாரியிலிருந்து ஜல்லி, கிராவல் லாரிகள் மூலம் தச்சூர் முதல் சித்தூர் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வருமானவரித்துறை சார்ந்த இரு குழுக்கள் சாலை பணிகளுக்காக புண்ணியம் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர் அலுவலகம் மற்றும் கல்குவாரியில் வருமானவரித்துறையினர் 10க்கும் மேற்ப்பட்டோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனையில் வருமானவரி துறை அதிகாரிகள் கலந்து கொண்டு குவாரியிலிருந்து முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுக்குப் பிறகு குவாரியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விவரங்கள் தெரியவரும் என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.