அமைச்சர் எ.வ வேலு வீடு,நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.;
Update: 2023-11-03 02:36 GMT
அமைச்சர் எ.வ.வேலு
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு, ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் கூறப்படுகிறது. திருவண்னாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியில் மத்திய பாதுகாப்பு படையின் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திருவண்ணாமலை உள்பட மொத்தம் 40 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.