வருமான வரித்துறை சோதனை, அரசியல் நாடகம்- அமைச்சர் மனோ தங்கராஜ்
Update: 2023-11-03 07:28 GMT
அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 28 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்காக தமிழ்நாடு மற்றும் கேரள அரசு நீதிமன்றத்தை நாடும் நிலை உள்ளது. மக்கள் பணியை செய்யவிடாத மத்திய அரசு, மக்கள் பணியை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனை உள்ளது. இது ஒரு அரசியல் நாடகம். பாஜகவினர் அவர்களை பற்றியும், மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கும் பொருந்துமா? என்று பார்க்க வேண்டும். ஏன் பொருந்தவில்லை என்றும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.