பயணியர் வருகை அதிகரிப்பு - கூடுதல் விமானங்கள் இயக்கம்

சென்னை விமான நிலையத்தில், இயல்பைவிட பயணியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, கோடை கால விமான போக்குவரத்து கால அட்டவணை செயல்பட துவங்கி உள்ளது.

Update: 2024-05-07 02:17 GMT

பைல் படம் 

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சமீபத்தில் லோக்சபா தேர்தல் முடிந்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் வெளியூருக்கு சுற்றுலா செல்ல துவங்கிவிட்டனர். சென்னை விமான நிலையத்தில், இயல்பைவிட பயணியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, கோடை கால விமான போக்குவரத்து கால அட்டவணை செயல்பட துவங்கி உள்ளது.

சென்னை - துாத்துக்குடிக்கு இதுவரை ஆறு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது எட்டு விமானங்களாக இயக்கப்படுகின்றன. திருச்சிக்கு எட்டு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் 12 விமானங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோவைக்கு இதுவரை 12 விமானங்கள் இயக்கப்பட்டன. இப்போது 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரைக்கு 10ல் இருந்து 14 ஆகவும், பெங்களூருக்கு 16ல் இருந்து 22 ஆகவும், ஹைதராபாத்துக்கு 20ல் 28 ஆகவும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தவிர, டில்லி, மும்பை, கோல்கட்டா போன்ற நகரங்களுக்கும், கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. சென்னை - பாரீஸ் இருமார்க்கத்திலும், ஏர்பிரான்ஸ் விமான நிறுவனம், இதுவரை வாரத்திற்கு 3 நாட்கள், விமான சேவைகளை இயக்கி வந்தது. பயணியர் கூட்டம் அதிகரிப்பதால், வாரத்திற்கு ஐந்து நாட்கள் இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.

Tags:    

Similar News