ஆந்திராவில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை வரத்து அதிகரிப்பு

ஆந்திராவில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2023-12-16 12:14 GMT

எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆந்திராவில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளிலும், இதை தவிர ஆந்திராவில் பல பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் எலுமிச்சை தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களில் அமோக விளைச்சலை தந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக ஆந்திராவில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளது. கடும் குளிர் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை குறைந்துள்ளதால், விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News