ஒகேனைக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர் வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது,;
Update: 2024-05-17 01:52 GMT
நீர்வரத்து அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில நாட்களுக்கு முன்பு வரை நீர்வரத்து சரிந்து பாறைகளாக காணப்பட்டு வந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று முன்தினம் வினாடிக்கு 1200 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 1, 000 கன அடியாக இருந்தது. மேலும் நேற்று பிற்பகலில் இருந்து நீர் வரத்து அதிகரிக்க துவங்கி இரவு 9 மணி அளவில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலிகுண்டுலுவில் மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.