மேட்டூர் அணைக்கு நீர் வரத்து உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,584 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2023-12-22 05:48 GMT

மேட்டூர் அணை

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,191 கன அடியில் இருந்து இன்று 1,584 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.51 அடியில் இருந்து 70.63 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 33.24 டிஎம்சி,யாக உள்ளது.குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News