தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்ப நிலை
வரும் 3 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும், நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 40.6° செல்சியஸ் (+1.7° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 40.6° செல்சியஸ் (+2.6° செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி/ இயல்பை விட சற்று அதிகமாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 40.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32° – 40° செல்சியஸ்; புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 38° மற்றும் 37° செல்சியஸ்; மற்றும் மலைப் பகுதிகளில் 24° –25° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.6° செல்சியஸ் (+1.7° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 40.6° செல்சியஸ் (+2.6° செல்சியஸ்) பதிவாகியுள்ளது. தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 3-4 தினங்களில் துவங்கக்கூடும். இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 31 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 3 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நேற்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.