இந்தியா கூட்டணி மிக பெரிய வெற்றி பெறும் : அமைச்சர் பேட்டி!

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மிக பெரிய வெற்றி பெறும் என்று அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி கூறினார். 

Update: 2024-03-20 06:55 GMT

 அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வந்தார். அவர் கோவிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் இரண்டே விஷயங்கள் தான் செய்துள்ளார்.  ஒன்று வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வது. மற்றொன்று இல்லாத விஷயங்களை இருப்பது போல் சொல்லுவது. இதனை முழுமையாக நாம் ஒழித்து ஆகவேண்டும். இதற்கு நிச்சயமாக இன்னும் 2 மாதங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் தீர்வு கிடைக்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மிக பெரிய வெற்றி பெறும். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News