நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி - காதர் மொய்தீன்

Update: 2023-12-11 07:10 GMT
நல உதவிகள் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாநகராட்சி 31-வது வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் உபகரணங்கள் மற்றும் நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோட்டை மாநகராட்சி பல்நோக்கு அரங்கத்தில் நேற்று நடந்தது. கவுன்சிலர் சையத் மூசா தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் அலாவுதீன் வரவேற்றார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி மட்டுமின்றி வேறு ஒரு தொகுதியையும் தி.மு.க. கூட்டணியில் கேட்டு பெற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி முடிவு எடுக்கப்படும். நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் பா.ஜனதாவை விட காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. இந்தியா கூட்டணியில் நாங்கள் உள்பட 28 கட்சி தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் வேட்பாளர் பற்றி இப்போது தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இதற்காக தொகுதி பங்கீட்டை விரைந்து முடித்து வெற்றிக்கான வியூகங்களை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News