இந்திய ராணுவம் - ஜனவரி 4 ல் கடலூரில் உடல் தகுதி தேர்வு
Update: 2023-11-30 05:21 GMT
உடற்தகுதி தேர்வு
இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் படைப்பிரிவில் சேர்வதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கத்தில் வரும் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு வரும்போது அனுமதி சீட்டு, கல்வி சான்றிதழ், காவல் நன்னடத்தைச் சான்று, இருப்பிட சான்று, ஜாதி சான்றிதழ், பான் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளின் அசல் மற்றும் நகல் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.