புரோட்டின் பவுடரால் சிறுநீரக பிரச்னையா?

தசை வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக புரோட்டின் பவுடர்களை அதிகமாக பயன்படுத்தினால் ஏலும்பு தாது இழப்பு, சிறுநீரக பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் புரோட்டின் பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2024-05-16 15:46 GMT

கோப்பு படம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் மனிதர்கள் ஆரோக்கியமான முறையில் உடலுக்கு தேவையான உணவுப் பழக்க வழக்கங்களை எடுத்துக் கொள்வது தொடர்பான ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளது,, அதில் ஒரு கட்டுரையில் மனிதருக்கு தேவையான புரதச்சத்துக்கள் குறித்தும் அது தொடர்பான விளக்கங்கள் குறித்தும் ஆய்வுக்கு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது அவை “நம் உடலுக்கு புரதச்சத்து மிகவும் அவசியமானது நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்குவதற்கு அமினோ அமிலத்தின் தேவை உள்ளது 20 வகை அமினோ அமிலங்கள் உள்ளது அவற்றில் 9 ஒன்பது அமினோ அமிலங்கள் உடலில் உற்பத்தியாவதில்லை அவை நம் உட்கொள்ளும் உணவின் புரதச்சத்தில் இருந்து கிடைக்கிறது புரதச்சத்துக்கள் நாம் உட்கொள்ளும் மீன்,முட்டை ,கோழி இறைச்சி , ஆகியவற்றில் இருந்து புரதச்சத்துக்கள் கிடைக்கிறது அதேபோன்று முந்திரி பாதாம், பிஸ்தா ஆக்ரூட் பருப்புகள் ஆகியவை மூலமாகவும் புரதச்சத்துக்கள் கிடைக்கிறது 65 கிலோ எடை கொண்ட ஒரு நபருக்கு 43 கிராம் முதல் 54 கிராம் வரை புரதச்சத்து ஒரு நாளைக்கு தேவை ஏற்படுகிறது.

நம் உடலுக்குத் தேவையான போட்டிகளில் பத்திலிருந்து பதினைந்து சதவீதம் உண்ணும் உணவு மூலமாக கிடைக்க வேண்டும் சமீப காலமாக உடலில் தசை வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என அதிகளவு புரோட்டீனை எடுத்துக் கொள்ள பலர் புரோட்டின் பவுடர் (ப்ரோட்டீன் சப்ளிமெண்டரி) அதிக பயன்படுத்துகின்றனர். அதில் அதிக அளவு சர்க்கரை, கலோரிகள் இல்லாத செயற்கையான இனிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கும் இவை உடலுக்கு ஆபத்து விளைவிக்க கூடியது புரோட்டின் பவுடர்களை அதிகளவு பயன்படுத்துவதால் எலும்புகளின் தாது இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவே ப்ரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News