இந்திய மாணவர்கள் புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்த்து போராட்டம்
ஒன்றுபட்ட இந்திய மாணவர்கள் அமைப்பின் சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட்டம்
By : King 24x7 Website
Update: 2024-01-14 05:56 GMT
ஒன்றுபட்ட இந்திய மாணவர்கள் அமைப்பின் சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தலைநகர் புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாணவர் அணி உள்பட 16 கட்சிகளின் மாணவர் அமைப்புகள் கலந்து கொண்டன. தி.மு.க. மாநில மாணவர் அணி செயலாளர் எழிலரசன் தலைமை வகித்தார். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் துணை அமைப்பாளர் கடல்அரசன் கார்த்தி கலந்து கொண்டார். இதில் மேலும் மேற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் கோல்டுபெல் தங்கமணி, ஐயப்பன் பெருமாள், ராகேஷ், மற்றும் மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.