ஓட்டுநர், நடத்துநர் தேர்வு பணி துவக்கம் - அமைச்சர் சிவசங்கர்

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை தொடர்ந்து மற்ற போக்குவரத்து கழகங்களில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்வு செய்யும் நடவடிக்கை தொடங்கி விட்டதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-06 08:34 GMT

 அமைச்சர்  சிவசங்கர் 

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி .சிவசங்கர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்குவது குறித்து, அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிபதி உத்தரவிற்கு இணங்க இருதரப்பு பேச்சு வார்த்தையும் முடிவுற்று அதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு முடிச்சூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது இந்தியாவிலேயே தலைசிறந்த பேருந்து நிலையமாக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது .

இந்த முனையத்திலிருந்து அனைத்து பேருந்துகளையும் இயக்கினால் மட்டுமே பயணிகளுக்கு சிரமம் இருக்காது என்று தெரிவித்தார். தொடர்ந்து கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது குறித்து கேட்டபோது, விபத்துக்கள் குறித்து சாலை பாதுகாப்பு குறித்த கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுகிறது. அதன்படி விபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறையால். பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது குறித்து கேட்ட போது, பொங்கல் பண்டிகை நேரத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது கூட எந்த ஒரு பேருந்தும் நிறுத்தப்படாமல் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டது. எனவே அதிக அளவில் காலி பணியிடங்கள் இல்லை. அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஆள் எடுக்கும் பணியில் எழுத்து தேர்வுகள் முடிவுற்ற நிலையில், தற்போது நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. அது முடிவற்ற பிறகு அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இது மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களிலும் காலியாக உள்ள ஓட்டுனர்கள் மற்றும்  நடத்தினர்களை தேர்வு செய்யும் நடவடிக்கை தொடங்கி விட்டதாகவும் அது முடிவற்றவுடன் அவர்களும் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர் என்றும்  தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது திமுக கட்சி நிர்வாகிகள் , அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்

Tags:    

Similar News