முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம்

Update: 2023-11-16 08:12 GMT

வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக உள்வட்ட வனப்பகுதி 328 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இந்த வனப்பகுதியில் புலிகள், யானைகள், மான்கள், கரடிகள், போன்றவைகள் உள்ளன. வருடந்தோறும் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று கணக்கெடுக்கும் பணி துவங்கியது. வனப்பகுதியில் 37 குழுக்களாக பிரியும் வனத்துறையினர் ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் வீதம் 130 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுக்கும் பணிக்காக தயாரிக்கப்பட்டுள்ள செல்போன் செயலி மூலம் தத்துரூபமாக இந்த கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஜிபிஎஸ் கருவி, தெர்மாமீட்டர், பைனாகுலர், போன்றவற்றை வைத்தும் இந்த பணி நடைபெறுகிறது 7 நாட்கள் நடைபெறும் இந்த பணியில் ஒவ்வொரு நாளும் வன விலங்குகளை நேரில் பார்ப்பது, அதன் கால்தடம், எச்சம், நீர்நிலைகளில் அதன் நடமாட்டம் போன்றவற்றை வைத்து துல்லியமாக 22 ஆம் தேதி வரை இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News