காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் கல்வெட்டுப் படி எடுக்கும் பணி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்த கல்வெட்டு படி எடுக்கும் பணியின் போது ராஜராஜசோழன் கோவிலுக்கு அளித்த கொடைகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Update: 2024-01-26 07:56 GMT

கல்வெட்டு படி எடுத்தல் 

தமிழக தொல்லியல் துறை சார்பில், பல்வேறு கோவில்களில் பழமையான கல்வெட்டு படி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலிலும், இரு நாட்களாக கல்வெட்டு படி எடுக்கும் பணிகள் நடந்தன. கோவிலின் உட்பிரகாரத்தில், பெரிய நந்தி பின்புறம், கோசாலை செல்லும் வழியில், தரையாக இருக்கும் இடத்தில் உள்ள கல்வெட்டில் படி எடுக்கப்பட்டுள்ளன. இதில், 1,000 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம்ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ராஜராஜசோழன் கொடுத்த பொருட்கள் பற்றி பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து தொல்லியல் அலுவலர் கோ.லோகநாதன் கூறியதாவது: நாங்கள் மூன்று பேர் கொண்ட குழுவினர், இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறோம். நாளையும் ஆய்வு செய்ய இருக்கிறோம். கோவிலின் தரையிலேயே இந்த கல்வெட்டுகள் கிடந்துள்ளன. அவை கல்வெட்டு என தெரியாமல் பல ஆண்டுகள் கிடந்துள்ளன. கல்வெட்டு படி எடுத்ததில், ராஜராஜசோழன் பற்றிய மூன்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அதில், தேவர் அடியாளர்கள் கோவிலுக்கு செய்த பணிகள் குறித்து இடம் பெற்றுள்ளன. மேலும், ராஜராஜசோழன் இக்கோவிலுக்கு 90 ஆடுகளும், முத்துவடம் ஆகியவை வழங்கிய விபரங்களும் இந்த கல்வெட்டுகளில் கிடைத்துள்ளன. தரையில் கிடக்கும் கல்வெட்டுகளை பாதுகாக்க கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்."

Tags:    

Similar News