சென்னையில் தபால் வாக்குப்பதிவினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

சென்னையில் தபால் வாக்குப்பதிவினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-14 14:26 GMT

வக்குப்பதிவினை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்

நாடாளுமன்ற பொதுத்தேர்தல்- 2024னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலர் (மத்திய சென்னை) அலுவலத்தில் இன்று (14.04.2024) நடைபெற்ற காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கான நீட்டிக்கப்பட்ட தபால் வாக்குப்பதிவினையும்,

அங்குள்ள தபால் வாக்குப்பதிவு மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டார துணை ஆணையருமான (மத்திய சென்னை) கே.ஜெ. பிரவீன் குமார், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News