அரியலூரில் வாக்குச் சாவடி பொருள்கள் பிரித்து அனுப்பும் பணி ஆய்வு
அரியலூரில் வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தக் கூடிய பொருள்கள் பிரித்து அனுப்பும் பணி ஆய்வு செய்யப்பட்டது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தக் கூடிய பொருள்கள் சனிக்கிழமை பிரித்து அனுப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்தக்கூடிய கையேடு,
படிவங்கள், படிவத்தை பாதுகாப்பாக வைப்பதற்கான பெட்டிகள், வாக்காளர் பட்டியல், வாக்காளர்களுக்கு வைக்கப்படும் அழியாத மை குப்பிகள், எழுதுபொருள்கள், முத்திரைக்கு பயன்படுத்தக்கூடிய அரக்குமெழுகு உள்ளிட்ட சுமார் 180 பொருள்கள்,
அந்தந்த கோட்டாட்சியர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பிரித்து அனுப்பட்டன. ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்களில் நடைபெற்ற அப்பணியை தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்து வாக்குப் பதிவு பொருள்களும் விடுபடாமல் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் தமிழ்ச்செல்வன், வட்டாட்சியர் (தேர்தல்) வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.