புயல் நீர் வடிகால் பணிகள் - வருவாய் கோட்டாசியர் ஆய்வு

வடச்சென்னையில் புயல் நீர்வடிகால் அமைக்கும் பணியை வருவாய் கோட்டாசியர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2024-02-10 00:50 GMT

ஆய்வு

சென்னை முழுவதும் பல பணிகளை வருவாய் கோட்ட ஆணையாளர் மற்றும் மண்டல அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வட சென்னையில் வடக்கு வருவாய் கோட்ட ஆணையாளர் ரவி தேஜா ஐஏஎஸ் ஆய்வு செய்தார். புயல் நீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் காமராஜபுரம் குளத்தில் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டார்.

எஸ் ஆர் எஃப் பிரைவேட் லிமிடெட் வளாகத்தில் நடைபெற்று வரும் புதிய கட்டுமான பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், மண்டலம் 2ல் உள்ள 16, 17 மற்றும் 18வது பிரிவில் உள்ள மியாவாக்கி வனத்தின் வளர்ச்சிப் பணிகளையும் வடக்கு வருவாய் கோட்ட ஆணையாளர் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News