தந்தை-மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ;

Update: 2024-02-02 13:15 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை சி.பி.ஐ. கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.  சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், தந்தை, மகன் கொலை வழக்கில் ஒரு சாட்சியிடம் 28 நாட்களுக்கு மேலாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதால், வழக்கு விசாரணை தாமதம் என்று கூறினார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் குறுக்கு விசாரணை என்ற பெயரில் 28 நாள் விசாரணை நடைபெற்றால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா இல்லை தினந்தோறும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து ஜாமீன் கோரிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News