கதிர் ஆனந்த் வழக்கில் இடைக்கால தடை விதித்து உத்தரவு.
திமுக எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
Update: 2024-05-26 01:33 GMT
கதிர் ஆனந்த்
பினாமி சட்டத்தின் கீழ் மே 31ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விசாரணை அதிகாரி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கதிர் ஆனந்த் வழக்கு தொடர்ந்தார். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும், கதிர் ஆனந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது. கதிர் ஆனந்த்-க்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் வழக்கின் விசாரணையை ஜூன் மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.